பண்டிகை காலங்களில் பொதுமக்கள் வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு திரும்புவார்கள். இதனை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் அவர்களின் இஷ்டம் போல கட்டணத்தை வசூலிப்பர்கள். இதனால் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். தமிழகத்தில் பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இந்த கட்டணம் கண்காணிக்கப்படும், கட்டணம் கூடுதலாக இருந்தால் பஸ்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தீபாவளி விடுமுறைக்காக இன்று சொந்த ஊர் செல்லும் மக்கள் ஆம்னி பேருந்துகளின் விலை மும்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர். சென்னை டூ மதுரை செல்ல டிக்கெட் விலை ≈2,500க்கு மேல் வருகிறது. இதே போல் சென்னையில் இருந்து வெளியூருக்கு செல்லும் பேருந்துகளின் விலையும் நினைத்துப்பார்க்க முடியாத அளவில் உள்ளது. அதிகாரிகள் உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.