மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த பிரபல இந்தி சீரியல் நடிகை துனிஷா சர்மா (20) கேராவனில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருடைய தற்கொலை விவகாரத்தில் காதலன் ஷீசன் கான் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், துனிஷா சர்மாவின் பிரேத பரிசோதனை முடிவடைந்து அவருடைய உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் துனிஷா சர்மாவின் இறுதிச் சடங்கின் போது அவருடைய தாயார் திடீரென மயக்கமடைந்து விழுந்துள்ளார். இவரை மற்றவர்கள் காருக்கு தூக்கி சென்றுள்ளனர். மேலும் இது தொடர்பான உருக்கமான வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.