“பிஏ 2” வைரஸ் தொற்று அதிகரித்தால் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நடப்பாண்டு ஜனவரி இறுதியில் கொரோனா தாக்கம் உச்சத்தை தொட்ட நிலையில், 3 வது அலையின் தாக்கம் தொடங்கியது. இதனால் தடுப்பு விதிமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டு வந்தததன் பலனாக கொரோனா சற்று குறைந்து வருகிறது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு சிறப்பான முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
மேலும் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டது. தாக்கம் குறைந்து வந்தாலும் சமூக இடைவெளியை பின்பற்றுதல்,முகக்கவசம் அணிதல் போன்ற விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் ஓமைக்ரான் வைரஸை தொடர்ந்து பிரிட்டன் நாட்டில்,”பிஏ 2″ வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் அதிக பாதிப்பு மற்றும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தும் என ஜப்பான் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை அளித்துள்ளனர்.
இந்த ”பிஏ 2″ வைரஸ் தொற்று ஓமைக்ரான் வைரஸ் தொற்றை போல் இந்தியாவிற்குள் தாக்கத்தை ஏற்படுத்தினால் அந்த சமயத்தில் பாதிப்பு நிலவரத்தை தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதனால் மீண்டும் இரவு நேர ஊரடங்கு பொது இடங்களில் கட்டுப்பாடு, கடைகளுக்கு நேர கட்டுப்பாடு, பொது இடங்களில் தடுப்பூசி போடுவதற்கு மட்டுமே அனுமதி போன்றவை அமலாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இந்த தகவல் குறித்து பிஏ 2 வைரஸ் தாக்கத்தின் தீவிரத்தைப் பொறுத்த முழு ஊரடங்கு முடிவு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.