Categories
மாநில செய்திகள்

ஷாக் நியூஸ்…. தமிழக அரசு வேலைவாய்ப்புக்காக காத்திருப்போருக்கு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா மற்றும் அதன் உறுமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் தடுப்பூசி செலுத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. மேலும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்த காரணத்தினால் எந்த அரசு மற்றும் அரசு சாரா வேலைவாய்ப்பு அறிவிப்பும் வெளியாகவில்லை. அதனால் பலர் வேலை வாய்ப்பில்லாமல் சிரமப்பட்டு வந்தனர்.

இதையடுத்து 3-வது அலையின் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, வேலைவாய்ப்பின்மை ஏற்படுமோ என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் 21-ஆம் தேதி வரை மாவட்ட மற்றும் மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களின் விபரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்காக 75,31,172 பேர் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்துள்ளவர்களில் ஆண்கள் 35,35,992, பெண்கள் 3994898,மூன்றாம் பாலினத்தவர் 232 பேர் ஆகும்.

இதையடுத்து வயது வாரியான விபரங்கள் அடிப்படையில் 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் 1825668 பேர் மற்றும் 19 வயது முதல் 23 வயது வரை உள்ள பல்வேறு தரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 1550245 பேர் இந்த வகையில் 24 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் 2830275 பேர் உள்ளனர். 36 முதல் 57 வயது உள்ளவர்கள் 1313652 பேர் ஆகும். அவர்களை தொடர்ந்து 58 வயதிற்கு மேற்பட்டவர்கள் 11282 பேர் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை 139414 பேர் உள்ளதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது.

Categories

Tech |