பிரேசில் நாட்டில், கடந்த 2018-ஆம் ஆண்டு அழகி பட்டம் வென்றவர் அழகி கிளெய்சி கொரிய்யா (வயது 27). இவர் தென்கிழக்கு நகரமான மெகேயில் ஒப்பனை நிரந்தர ஒப்பனை நிபுணராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு, டான்சில் பிரச்சனையின் காரணமாக, அறுவை சிகிச்சை ஒன்றை செய்துள்ளார்.
எனவே இந்த டான்சில் அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து, அவருக்கு தொடர்ந்து உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. மேலும் அடுத்த 5 நாட்களில் மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து ஏப்ரல் மாதம், கிளெய்சிக்கு மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, 2 மாதங்களாக கோமா நிலையில் இருந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி, கிளெய்சி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில், அவரது உறவினர்கள், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில், சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.