Categories
மாநில செய்திகள்

ஷாக் நியூஸ்…. 97 கல்லூரிகள் மூடல்… ஏஐசிடிஇ அதிரடி உத்தரவு…!!

இந்தியாவில் ஏஐசிடிஇன் கீழ் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் ஏஐசிடிஇன் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, தங்களது அங்கீகாரத்தை ஆண்டுதோறும் புதுப்பித்து கொள்ளுதல் அவசியம் ஆகும். ஆனால் அப்படி இல்லையென்றால், அந்த படிப்புகள்  ஏஐசிடிஇயால் அங்கீகாரமற்றவையாக கருதப்படும். மேலும் மாணவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வியில் சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இந்நிலையில் சமீபகாலத்தில் திறக்கப்பட்ட கணிசமான கல்லூரிகள் முறையான அனுமதியைப் பெறாமல் இயங்குவதாகவும் மற்றும் பகுதிநேர அதிகாரம் பெற்று முழுநேர படிப்புகளை கற்றுக் கொடுப்பதாகவும் ,ஏஐசிடிஇக்கு புகார்கள் வந்துள்ளது. அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில், நாடு முழுவதும் நீண்டகாலமாக தொடர்ந்து தங்கள் கல்லூரியின் அங்கீகாரத்தை புதுப்பிக்காமல் செயல்பட்டு வரும் 97 கல்லூரிகள் மூடப்பட உள்ளதாக ஏஐசிடிஇ தற்போது அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் படி, 6 ஆண்டுகளாக அங்கீகாரத்தை புதுப்பிக்காமல் இருக்கும் பொறியியல் கல்லூரிகள் மூடப்படும் என ஏஐசிடிஇ உத்தரவிட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 6 கல்லூரிகள் மூடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |