வடக்கு சீனாவில் ஒரு வினோதமான சம்பவம் 10 நாட்களாக அரங்கேறியுள்ளது. அதாவது 100-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் 10 நாட்களாக ஒரே இடத்தில் வட்டமாக நடந்து வருகிறது. கடந்த 4-ம் தேதியிலிருந்து ஆடுகள் அனைத்தும் ஒரே இடத்தில் நடக்க ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. இந்த காட்சி அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வ காரணம் எதையும் வெளியிடவில்லை. இருப்பினும் ஆடுகளின் வித்தியாசமான நடவடிக்கைக்கு வட்ட வடிவில் நடந்து செல்லும் நோய்தான் காரணம் என்று கூறப்படுகிறது.
அதாவது இந்த நோயினால் பாதிக்கப்பட்ட விலங்குகள் நிலையான பொருட்கள் மீது சாய்ந்து கொள்ளும், மூலைகளை நோக்கி செல்லும், அல்லது பாதிக்கப்பட்ட இடத்தை நோக்கி வட்டமிடும். இந்த நோய் பலவிதமான விலங்குகளை பாதிக்கலாம் என்று மெர்க் கால்நடை கையேடு கூறுகிறது. மேலும் 10 நாட்களாக ஒரே இடத்தில் வட்டமாக நடந்து செல்லும் செம்மறி ஆடுகள் தண்ணீர் குடித்ததா அல்லது சாப்பிட்டதா என எந்த ஒரு விவரமும் தெரியாததால் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.