பணம் அனுப்புவதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
National payments corporation of India என்ற அமைப்பின் மூலம் சில ஆண்டுகளுக்கு முன்பு upi அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் நாளுக்கு நாள் பணம் செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மக்கள் ஷாப்பிங் செய்யவும், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பணம் அனுப்பவும் இதனை பயன்படுத்துகிறார்கள். இதனையடுத்து வங்கியில் இருந்து பணம் செலுத்துவது மிகவும் சுலபமானது. தற்போது அரசு இதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் எஸ்பிஐ வங்கியின் மூலம் ஒரு நாளைக்கு ஒரு லட்ச ரூபாய் வரை அனுப்பலாம். ஆனால் ஒரு நாளைக்கு ஒருவர் 20 முறை மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும் கனரா வங்கி போன்ற சிறிய வங்கிகளால் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே அனுப்பப்படும்.இந்த நிலையில் வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் அனுப்ப வேண்டும் என்றால் எந்த வங்கியில் அவர்களுக்கு வங்கி கணக்கு இருக்கிறதோ அந்த வங்கிக்கு நேரடியாக சென்று பெரிய அளவு பணத்தை அடுத்தவர்களுக்கு அனுப்பலாம். மேலும் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை திறந்து அல்லது ஆப் மூலமாகவோ பணத்தை அனுப்பலாம். இது பற்றி தெரியாதவர்கள் வங்கியிடம் நேரடியாக செல்வது நல்லது.
இந்நிலையில் upl பரிவர்த்தனையை முதன் முதலாக தொடங்கிய போது Paytm நிறுவனம் ஒரு நாளைக்கு ஒரு லட்ச ரூபாய் வரை பணம் அனுப்ப அனுமதிக்கிறது. அதில் ஒரு மணி நேரத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே அனுப்ப முடியும். அதிலும் இந்திய தயாரிப்பான phone pe மூலம் நாம் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ஒரு லட்ச ரூபாய் அனுப்பலாம்.இந்த நிலையில் பிரபல நிறுவனமான கூகுள் பே ஒரு நாளைக்கு ஒரு லட்ச ரூபாய் மட்டுமே அனுப்ப பயனாளர்களை அனுமதிக்கும், அதுவும் பத்து முறையாக அதை அனுப்ப வேண்டும். இந்நிலையில் முதல் முறையாக AMOZON Pay பயன்படுத்தும் பயனாளர்கள் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே பணம் அனுப்ப முடியும்.