சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த சீன அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த வரிசையில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்கள் தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வருவதை தடுக்க அவர்கள் வீட்டின் கதவுகள் எலக்ட்ரானிக் அலாரம் பொருத்த அரசு திட்டமிட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்கள் தேவையில்லாமல் அறை கதவை திறக்கும் போது இந்த அலாரம் அடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஷாங்காய் நகர குடியிருப்புகளில் இந்த எலக்ட்ரானிக் அலார திட்டம் நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Categories