டெல்லியில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி முதல் பிப்ரவரி 26ஆம் தேதி வரை டெல்லி ஷாப்பிங் திருவிழா நடைபெறும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பேசி அவர், இது நாட்டின் மிகப்பெரிய நிகழ்வாக இருக்கும்.இன்னும் சில வருடங்களில் உலகின் மிகப்பெரிய ஷாப்பிங் திருவிழாவாக இதை மாற்றுவோம். இதன் மூலம் டெல்லியின் பொருளாதாரம் பெரும் ஏற்றம் பெறும். தொழிலதிபர்களுக்கு இது ஒரு பெரிய வாய்ப்பாக அமையும்.
டெல்லி சர்வதேச அளவில் முன்னிலைப்படுத்த இது ஒரு பெரிய வாய்ப்பாக இருக்கும். டெல்லி மற்றும் அதன் கலாச்சாரத்தைஅனுபவிக்க உலகம் முழுவதிலும் இருந்தும் மக்கள் அழைக்கப்படுவார்கள் என்று அவர் கூறியுள்ளார் இந்த அறிவிப்பு ஷாப்பிங் பிரியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமல்லாமல் பொதுமக்கள் வாங்கும் பொருள்களுக்கு மிகப்பெரிய தள்ளுபடி வழங்கப்படும் எனவும் நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.