Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஷாம்பூ முதல் பிஸ்கட் வரை…. இதெல்லாம் விலை உயரப்போகுதாம்…. வெளியான ஷாக் நியூஸ்…!!!!

இந்தோனேஷியா தான் உலகிலேயே அதிகமான பாமாயில் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. ஆனால் அங்கு சமையல் எண்ணெய் விலை அதிகரித்து விட்டதால் பாமாயில் ஏற்றுமதிக்கு இந்தோனேசியா தற்போது தடைவிதித்துள்ளது. இந்த தடை ஏப்ரல் 28 முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்தியாவானது தன்னுடைய பாமாயில் தேவையை பெருமளவில் இந்தோனேஷியாவில் இருந்து பூர்த்தி செய்து கொள்கிறது. இந்த நிலையில் இந்தோனேஷியா தன்னுடைய நாட்டிலிருந்து பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளதால் இந்தியா கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்தியாவில் பாமாயில் மட்டுமல்லாமல் பல்வேறு சமையல் எண்ணெய்களின் விலையும் அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி பாமாயில் விலை உயர்வால் மற்ற பொருட்களின் விலையும் சேர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி சாக்லேட், ஷாம்பூ, சோப்பு, நூடுல்ஸ், பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களின் விலையும் உயரும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில் இந்த பொருட்கள் தயாரிப்பதற்கு பாமாயில் தேவைப்படுகிறது. மேலும் அழகு சாதன பொருட்கள் விலையும் உயரும் என்று கூறப்படுகிறது.

இந்தோனேசியாவுக்கு அடுத்தபடியாக மலேசியா பாமாயில் தயாரிப்பில் மிகப்பெரிய உற்பத்தியாளராக உள்ளது. ஆனால் மலேசியாவில் தொழிலாளர்கள் தட்டுப்பாடு காரணமாக பாமாயில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் பாமாயில் விலை மேலும் உயர்ந்து விட்டது.

Categories

Tech |