அட்லீ, நயன்தாரா, ஷாருக்கான் உள்ளிட்டோர் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் அட்லீ. இவர் ஒரு சில திரைப்படங்கள் மூலமே மிகவும் பிரபலமடைந்தார். இவர் ஆர்யா, விஜய் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இந்நிலையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து இயக்குக்கின்றார் அட்லீ.
ஜவான் என பெயரிடப்பட்ட இத்திரைப்படத்திற்கு நயன்தாரா கதாநாயகியாக நடிக்கின்றார். இந்தநிலையில் படத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. இத்திரைப்படத்தில் தீபிகா படுகோன் கேமியோ அப்பேரன்ஸ் கொடுக்க இருப்பதாக சொல்லப்படுகின்றது. கௌரவத் தோற்றத்தில் நடிக்கும் தீபிகா படுகோனின் கதாபாத்திரம் முக்கியம் நிறைந்ததாக இருக்கும் என செய்தி வெளியாகியிருக்கிறது.