அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்திலிருந்து நயன்தாரா விலகியுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
தமிழ் திரையுலகில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இதையடுத்து இவர் தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். தற்போது அட்லீ பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது.
தற்போது ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் சிக்கியதால் இந்த படத்தின் படப்பிடிப்பு முடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படப்பிடிப்பு தாமதமாவதால் நடிகை நயன்தாரா இந்த படத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் பரவி வருகிறது. மேலும் அவருக்கு பதிலாக சமந்தா இந்த படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அட்லீ இயக்கத்தில் வெளியான தெறி, மெர்சல் ஆகிய படங்களில் சமந்தா கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.