Categories
தேசிய செய்திகள்

ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் ஜாமீனில் விடுவிக்கப்படுவாரா…? தொடர்ந்து இன்றும் விசாரணை…!!!

ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் மீதான ஜாமீன் வழக்கு இன்று விசாரணைக்கு வருகின்றது.

மும்பையிலிருந்து கோவாவுக்கு சென்ற கப்பலில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருளை பயன்படுத்தி வருவதாக தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் மற்றும் 8 பேரை கைது செய்தனர். பின்னர் நான்கு நாட்கள் தேசிய போதை பிரிவு தரப்பினர் அவரை காவலில் எடுத்து விசாரணை செய்தனர். தற்போது அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதில் மூன்று முறை அவருக்கு ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆரியன் கான் சார்பில் தாக்கல் செய்த ஜாமீன் மனு நேற்று மும்பை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் ஆரியன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும், அதனை விற்பனை செய்ததாகவும் குற்றம் சாட்டி இருந்தனர். பின்னர் ஆர்யன்கான் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் கப்பலில் சோதனை நடத்தியபோது ஆர்யன் கான் அங்கு இல்லை என்றும், போதைப்பொருள் வாங்குவதற்கான பணமும் அவரிடம் இல்லை என்று கூறியுள்ளார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்து இருந்தது. இன்று மீண்டும் விசாரணை நடைபெறும். அப்போது அவருக்கு ஜாமீன் வழங்கப்படுமா? இல்லை மீண்டும் ஜெயிலில் அடைக்கப்படுவாரா? என்பது தெரியவரும்

Categories

Tech |