Categories
தேசிய செய்திகள்

ஷாருக்கான் வீட்டிற்கு சென்றதற்கு காரணம் என்ன….?? என்சிபி அதிகாரி கொடுக்கும் விளக்கம்….!!!

ஷாருக்கான் வீட்டிற்கு சோதனை நடத்துவதற்காக செல்லவில்லை என என்.சி.பி மண்டல அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த 3ஆம் தேதி மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் நடந்த போதை பொருள் விருந்து நிகழ்ச்சி விவகாரத்தில் இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். ஆரியன் கான் முன் ஜாமீன் கிடைக்காததால் தற்போது மும்பை அர்தர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சாருகான் சிறையில் இருந்த தன் மகனை பார்த்து விட்டு வந்துள்ளார். இந்த சந்திப்பு முடிந்து ஷாருகான் வீடு திரும்பியபோது போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மும்பையில் உள்ள ஷாருக்கானின் வீட்டிற்கு சென்றனர்.

அப்போது ஷாருக்கான் வீட்டில் சோதனை நடைபெறுவதாகவும் விசாரணை நடத்தப்படுவதாகவும் சில தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து விளக்கம் அளித்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனர் அமீர் ஷாருக்காணிடம் விசாரணை நடத்துவதற்கோ அல்லது அவர் வீட்டில் சோதனை செய்வதற்கோ என்சிபி அதிகாரிகள் செல்லவில்லை எனவும், ஆரியன் கான் தொடர்பாக சில ஆவணங்களை எடுப்பதற்காகவே சென்றதாகவும் கூறியுள்ளனர். மேலும் நடைமுறை தேவையின் ஒரு பகுதியாகவே அங்கு சென்றதாகவும் என்.சி.பி டிடிஜி அசோக் முத்தா கூறியுள்ளார்..

Categories

Tech |