Categories
தேசிய செய்திகள்

ஷாரோன் கொலை வழக்கு…. பல்டி அடித்த காதலி….. அதிர்ச்சியில் திகைத்து நின்ற போலீசார்….!!!!!

ஷாரோன் ராஜ் கொலை வழக்கில் அவரது காதலி குற்றத்தை மறுத்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நெய்யூரில் தனியார் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் கேரள மாநிலத்தை சேர்ந்த ஷாரோன் ராஜ் என்பவர் பிஎஸ்சி “ரேடியாலஜி” இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். இவரும் ராமன்சிறை பகுதியை சேர்ந்த கிரீஷ்மா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் இருவரின் வீட்டிற்கும்  தெரிந்துள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 14-ஆம் தேதி திடீரென கிரீஷ்மா ஷாரோன் ராஜை  தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். அப்போது திடீரென ஷாரோன் ராஜிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிரீஷ்மா உடனடியாக அவரது நண்பருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஷாரோன் ராஜின் நண்பர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு  அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஷாரோன் ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கிரீஷ்மாவிடம்  விசாரணை நடத்தினர். அதில் கிரீஷ்மா  காலாவதியான ஜூஸ் பாட்டிலை கொடுத்ததாகவும், இதனால் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டு  உயிரிழந்ததாக கூறினார்.

மேலும் போலீசார் தொடந்து  நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. அதில் கிரீஷ்மாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய அவரது பெற்றோர் நிச்சயம் செய்துள்ளனர். இதற்கு ஷாரோன் ராஜ்  எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் கிரீஷ்மா தனது வீட்டிற்கு ஷாரோன் ராஜை  அழைத்து விவசாயத்திற்கு பயன்படும் பூச்சி மருந்தை அவருக்கு கொடுத்துள்ளார். இதற்கு உடந்தையாக கிரீஷ்மாவின்  தாய் சிந்து, தாய் மாமா நிர்மல் குமார் ஆகியோர் இருந்துள்ளனர். இதனையடுத்து போலீசார் 3  பேரையும் கைது செய்துள்ளனர்.  இதனையடுத்து நேற்று கிரீஷ்மா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது கிரீஷ்மா கூறியதாவது.  “நான் ஷாரோன் ராஜை  கொலை செய்யவில்லை. போலீசார் வேண்டுமென இந்த வழக்கை என் மீது திணிக்கிறார்கள். மேலும் எனக்கு எதிரான ஆதாரங்களை பொய்யாக உருவாக்கியுள்ளனர்” என கூறியுள்ளார். இவரின் இந்த வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இதுகுறித்து போலீசார் கூறியதாவது, “குற்றவாளிகள் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படும் போது குற்றத்தை மறுப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இந்த வழக்கில் அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் தனது காதலனை கொலை செய்ததாக அளித்த வாக்குமூலத்தையும் வீடியோ எடுத்துள்ளோம். இதுகுறித்து 70 நாளில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்வோம் . இந்நிலையில்  கிரீஷ்மாவை  மறுபடியும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான அனுமதியை கோட் வழங்க மறுத்தால் மேல் கோர்ட்டில் அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்வோம்” என கூறியுள்ளனர்.

 

 

 

 

Categories

Tech |