எஸ்பிஐ வங்கிக்கு ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு சென்றவரை பேண்ட் அணிந்து வருமாறு எஸ்பிஐ வங்கி அனுமதி மறுத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவில் ஆஷிஸ் என்பவர் ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் சென்றுள்ளார். அவர் அணிந்த உடை காரணமாக வங்கிக்குள் நுழைய அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவரை வீட்டிற்கு சென்று முழு பேண்ட் அணிந்து கொண்டு வாருங்கள் என்று வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நாகரீகத்தை கடைபிடியுங்கள் என்று கூறி,ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு உங்கள் வங்கிக் கிளைக்கு வந்த என்னை அங்கிருந்து திருப்பி அனுப்பி விட்டனர் என்று கூறி எஸ்பிஐ வங்கிக்கு டேக் செய்திருக்கிறார்.அதுமட்டுமல்லாமல் ஒரு வாடிக்கையாளர் என்ன அணியலாம் மற்றும் அணியக்கூடாது என்று உங்கள் பாலிசியில் ஏதாவது இருக்கிறதா? அதிகாரப்பூர்வ கொள்கை உள்ளதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இவருக்கு பலரும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.