ஜப்பான் முன்னாள் அதிபரின் மனைவிக்கு பிரபல நாடுகளின் பிரதமர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஜப்பான் நாட்டின் முன்னாள் அதிபர் ஷின்சோ அபே துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய மறைவிற்கு பல நாடுகள் இரங்கல் தெரிவித்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்கா, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 3 நாடுகளின் அதிபர்களும் கூட்டாக சேர்ந்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில் ஜப்பான் முன்னாள் அதிபர் தங்கள் நாடுகளுடன் ஒரு வலுவான உறவை ஏற்படுத்தியுள்ளார் என்று புகழாரம் சூட்டியுள்ளனர்.
இதனையடுத்து ஷின்சோ அபேவின் மறைவிற்கு 3 நாடுகளின் அதிபர்களும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததோடு, அவரின் மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளனர். மேலும் ஜப்பான் கடந்த 2007-ம் ஆண்டு அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளை இணைத்து குவாட் அமைப்பு உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதற்கு முக்கிய காரணம் ஷின்சோ அபே ஆவார்.