Categories
உலக செய்திகள்

ஷின்ஜோ அபே மரணம்….. தற்காலிக நினைவிடத்தில் மக்கள் கண்ணீருடன் பிரார்த்தனை…!!!

ஜப்பான் நாட்டில் முன்னாள் பிரதமராக இருந்தவர் ஷின்ஜோ அபே(67). இவர் கடந்த 2006-2007, 2012-2020 ஆகிய காலகட்டங்களில் ஜப்பானில் பிரதமர் பதவி வகித்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு அவர் உடல் நலக்குறைவு காரணமாக பதவி விலகினார். இருப்பினும் கட்சி செயல்பாடுகளில் கலந்து கொண்டார். இந்நிலையில் ஜப்பான் நாடாளுமன்ற மேல் சபைக்கு நாளை தேர்தல் நடக்க உள்ளது. அதற்காக நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள நாரா நகர ரயில் நிலையம் முன்பு நேற்று தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஷின்ஜோ கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் பேச தொடங்கி சில நிமிடங்களில் அவருக்கு பின்னால் நின்று கொண்டு இருந்த ஒரு நபர் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதில் அவர் கழுத்தில் கொண்டு பாய்ந்துள்ளது. அவரை உடனடியாக சிகிச்சைக்காக நார மருத்துவ பல்கலைக்கழகம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் மருத்துவர்கள் எவ்வளவு முயற்சித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இது குறித்த காட்சிகளும், கொலையாளியை காவல்துறையினர் மடக்கி பிடிக்கும் காட்சிகள் தொலைக்காட்சியில் வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் நாட்டின் மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவரான அபே மேற்கு ஜப்பானில் வெள்ளிக்கிழமை பிரச்சார உரையின்போது சுட்டுக் கொல்லப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள தற்காலிக நினைவிடத்தில் மக்கள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Categories

Tech |