ஜப்பான் நாட்டில் முன்னாள் பிரதமராக இருந்தவர் ஷின்ஜோ அபே(67). இவர் கடந்த 2006-2007, 2012-2020 ஆகிய காலகட்டங்களில் ஜப்பானில் பிரதமர் பதவி வகித்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு அவர் உடல் நலக்குறைவு காரணமாக பதவி விலகினார். இருப்பினும் கட்சி செயல்பாடுகளில் கலந்து கொண்டார். இந்நிலையில் ஜப்பான் நாடாளுமன்ற மேல் சபைக்கு நாளை தேர்தல் நடக்க உள்ளது. அதற்காக நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள நாரா நகர ரயில் நிலையம் முன்பு நேற்று தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஷின்ஜோ கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் பேச தொடங்கி சில நிமிடங்களில் அவருக்கு பின்னால் நின்று கொண்டு இருந்த ஒரு நபர் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் அவர் கழுத்தில் கொண்டு பாய்ந்துள்ளது. அவரை உடனடியாக சிகிச்சைக்காக நார மருத்துவ பல்கலைக்கழகம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் மருத்துவர்கள் எவ்வளவு முயற்சித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.
ஷின்ஜோ இறந்ததற்கு உலக நாடு முழுவதும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதன்படி இது குறித்து தகவல் அறிந்த பிரதமர் மோடி, எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர்களை ஒருவரான ஷின்ஜோ அபே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் வார்த்தைகளால் சொல்ல முடியாத அதிர்ச்சியை துயரத்தையும் அளித்துள்ளது என்று தெரிவித்துள்ளார். இதுல எடுத்து அபேவின் படுகொலை நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கக் கூடிய வகையில் நாட்டில் ஜூலை 9ஆம் தேதி ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அவர் அறிவித்தார். அதன்படி இன்று டெல்லியில் உள்ள செங்கோட்டை, குடியரசு மாளிகை நாடாளுமன்றத்தில் உள்ளிட்ட அரசு அலுவலகத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.