முதல்வரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐஏஎஸ் அதிகாரி நீக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கட்சி வெற்றி பெற்றது. இதில் திமுக கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்ற பிறகு முதலில் நான்கு முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் ஒன்று உங்கள் தொகுதியில் ஒரு முதலமைச்சர் என்பதாகும். இதற்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரியை நியமிப்பதாக அறிவித்திருந்தார்.
அதன்படி உங்கள் தொகுதியில் முதலமைச்சர் பிரிவு சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ்க்கு பொறுப்பு வழங்கப்பட்டது. தற்போது அவருக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மின்னனு நிர்வாகத்தின் சிறப்பு அதிகாரியாகவும், ஷில்பா பிரபாகர் சதீஷ் செயல்படுவார் என தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவித்துள்ளார். மேலும் தமிழக அரசு கேபிள் டிவி நிர்வாக இயக்குனராக ஐஏஎஸ் அதிகாரி வி.பி ஜெயசீலனுக்கு கூடுதல் பொறுப்புகளை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.