Categories
சினிமா தமிழ் சினிமா

ஷிவானியை கண்டித்த தாய்… ‘என்னால தான் எல்லாம்’… வருத்தத்தில் கண்கலங்கும் பாலாஜி…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . வழக்கமாக ஒவ்வொரு சீசனிலும் இறுதி நாட்களை நெருங்கும் போது போட்டியாளர்களின் உறவினர்கள் வீட்டிற்குள் வரும் பிரீஸ் டாஸ்க் நடைபெறும் . பிரீஸ் டாஸ்க்கின் போது போட்டியாளர்கள் அசையாமல் நிற்க வேண்டும். பின்னர் ஏதேனும் ஒரு போட்டியாளரின் குடும்பத்தினர் வருகை தந்து உற்சாகப்படுத்துவர். இந்நிலையில் இன்று வெளியாகி இருந்த முதல் புரோமோவில் சிவானியின் தாயார் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளார் .

முதலில் கண்கலங்கி கட்டியணைத்த ஷிவானியின் தாய் பின்னர் அவரை தனியே அழைத்துச் சென்று கேள்விகள் கேட்கிறார் . இதையடுத்து தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோவில் என்னால் தான் பிரச்சனை என பாலாஜி வருத்தப்படுகிறார் . மேலும் இந்த விஷயத்தில் நான் சம்பந்தப்பட்டிருக்கிறேன் என நினைக்கும்போது எனக்கு வருத்தமாக இருக்கிறது என்று கூறி கண்கலங்குகிறார். இதிலிருந்து சிவானியின் தாயார் பாலாஜியிடம் பேசாமல் செய்திருப்பதாக தெரிகிறது.

Categories

Tech |