Categories
தேசிய செய்திகள்

“ஷீனா போரா கொலை வழக்கு”… இந்திராணி டிரைவருக்கு ஜாமீன்…. ஐகோர்ட்டு உத்தரவு….!!!!

மும்பையை சேர்ந்த ஊடகநிர்வாகியான இந்தி ராணி முகர்ஜி தான் பெற்ற மகளான ஷீனா போராவை கொன்று உடலை எரித்த வழக்கு சென்ற 2015 ஆம் வருடம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் இந்தி ராணியின் கார்டிரைவரான ஷியாம்வர் ராய் மற்றொரு வழக்கு ஒன்றில் சிக்கியபோது காவல்துறையினரிடம் மதுபோதையில் அளித்த வாக்குமூலத்தில், ஷீனா போரா கொலை ரகசியம் பற்றி உளறினார்.

இந்தி ராணி சமூகத்தில் உயர் அந்தஸ்தில் இருந்ததால், காவல்துறையினர் தீவிர விசாரணைக்கு பின் அவரை அதிரடியாக கைது செய்தனர். அத்துடன் அவரது முதல் கணவர் சஞ்சீவ் கன்னா, கார் டிரைவர் ஷியாம்வர் ராய், அப்போதைய கணவரும், ஊடக நிர்வாகியுமான பீட்டர் முகர்ஜி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பீட்டர் முகர்ஜியின் மகனை முறைதவறி காதலித்ததால் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது.

இதில் ஷியாம்வர் ராயை தவிர்த்து மற்ற அனைவரும் நீண்ட காலத்துக்கு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அண்மையில் தான் இந்திராணி சிறையிலிருந்து வெளியே வந்தார். இந்நிலையில் ஷியாம்வர் ராயும் ஜாமீன் கேட்டு மும்பை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு நேற்று அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கில் ஷியாம்வர் ராய் அப்ரூவராக மாறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |