ஷெரோ 2022க்கான விருதுகள் வழங்கும் விழாவில் சுஹாசினி மணிரத்னம், ராதிகா சரத்குமார், ஷெரோ ஹோம்புட் நிறுவனர் ஜெயஸ்ரீ, திலக் வெங்கடசாமி, சட்டமன்ற உறுப்பினர் எழிலன் போன்றோர் இணைந்து வீட்டு முறை உணவு தயாரிப்பில் சாதனைபடைத்த திருமதி நித்யாவிற்கு குயின் விருதை வழங்கினர். இவ்விழாவில் வீட்டு முறை உணவு தயாரிப்பில் சாதனைபுரிந்த 50-க்கும் அதிகமான பெண் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நடிகை ராதிகாஅவர்கள் பேசியிருப்பதாவது, நானும்-சுகாசினியும் 42 வருடங்கள் நண்பர்களாக இருந்து வருகிறோம்.
இதில் சுகாசினி மிகவும் பொறுமைசாலி, ஆனால் நான் பொறுமையாக இருக்கமாட்டேன். திறமையான பெண்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வில் தன்னை அழைத்தமைக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களை போன்ற பிரபலங்களுக்கு பாராட்டுக்கள், விருதுகள் கிடைப்பது பெரிதல்ல. வீட்டிலே இருக்கும் பெண்களுக்கு இந்த விருதுகளை வழங்குவது உண்மையிலேயே பாராட்டுக்குரியது ஆகும். இது போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இதற்கிடையில் அனைவரும் பிரபலங்களாக உருவாக இயலாது. இருப்பினும் அனைவரும் இதுபோன்ற நிகழ்ச்சிகளின் வாயிலாக ராணியாக இருப்பது மகிழ்ச்சி என்று பேசினார்.