Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஷேர் ஆட்டோ மீது மோதிய கார்…. ஆடு மேய்க்கும் தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சிவகங்கையில் கோர விபத்து ….!!

ஷேர் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் ஆடு மேய்க்கும் தொழிலாளி  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செம்பூர் காலனி பகுதியில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் பெரியசாமி அருண் என்பவருடைய ஷேர் ஆட்டோவில் ஆட்டிற்கு மருந்து வாங்குவதற்காக சுப்ரமணியபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார் நிலைதடுமாறி ஷேர் ஆட்டோவில் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த பெரியசாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பெரியசாமி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து பெரியசாமியின் மகனான அழகுராஜா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுநரான அருணை  கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |