தாடி வளர்க்கும் ஆண்களுக்கு இந்த தொகுப்பு கட்டாயம் படிங்ககள்
இளைஞர்கள் நிறைய பேருக்கு தாடி வளர்ப்பது என்பது மிகவும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. தனது தோற்றத்தை ஸ்டைலாக மாற்றுவதற்கு தாடியை அழகாக அலங்கரிக்கின்றனர். ஆனால் தாடி வளர்ப்பது நல்லதல்ல என்பது பெரும்பாலோரின் கருத்து. அது முகத்தின் அழகை கெடுத்து விடும் என்று நினைக்கிறார்கள்.
தாடி வளர்ப்பது அறிவுத்திறனை அதிகரிக்கும், தன்னம்பிக்கையை மேம்படுத்தும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. முகத்தை சூரிய கதிர்களில் இருந்து தாடி பாதுகாக்கிறது. வயது அதிகரிக்கும் போது முகத்தில் சுருக்கங்கள் விழும். அப்படி விழும் சுருக்கத்தை மறைப்பதற்கு தாடி உதவும். இதனால் முகம் சுருக்கம் இல்லாமலும் இருக்கும்.
நன்றாக ஷேவிங் செய்து முகத்தை மொழுமொழுவென்று வைத்திருக்கும் ஆண்களை விட தாடி வளர்க்கும் ஆண்களைத்தான் பெண்கள் விரும்புவதாக ஆய்வில் வெளியாகியுள்ளது. தாடி வளர்க்கும் ஆண்கள் எளிதில் பெண்களின் கவனத்தை ஈர்த்து விடுகிறார்கள். ஷேவிங் செய்யும் போது சருமம் எரிச்சலாவதோடு தடிப்புகள் தோன்றும். தாடி வளர்த்துக் கொண்டால் முகப்பரு பிரச்சனை வராது. சரும பிரச்சனைகளும் வராது.
ஷேவிங் செய்யும் போது சருமத்தில் உள்ள துளைகள் திறக்கும். சரும வறட்சி இதனால் ஏற்படும். கோடை, குளிர் காலத்தில் சருமத்தில் உள்ள துளைகள் ஈரப்பதத்தை இழக்கக்கூடும். தொடர்ந்து தாடி வளர்க்கும் போது இது போன்ற பிரச்சினைகளை வராது. தாடி வளர்ப்பது விஷயமல்ல. அதனை பாதுகாப்பது தான் விஷயம். அதில்தான் அழகும் உள்ளது.