Categories
மாநில செய்திகள்

ஷேவிங் பிளேடை இட்லியில் வைத்து சாப்பிட தொழிலாளி…. என்ன காரணம் தெரியுமா?…. நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம்….!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெள்ளாங்கோவில் பகுதியில் செல்வம்(62) என்பவர் வசித்துவருகிறார். இவர் காங்கேயம் அருகிலுள்ள பொரி குடோனில் கூலி வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 30 ஆண்டுகாலமாக குடும்ப பிரச்சினை காரணமாக தனது குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். தற்போது இவர் வயது முதிர்வு காரணமாக குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வந்ததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். இதுகுறித்து கடந்த மூன்று மாதங்களாக தன்னுடன் பணிபுரியும் சக ஊழியர்களிடம் புலம்பி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 31 ஆம் தேதி அன்று செல்வம் சாப்பிட வைத்திருந்த இட்லிக்குள் ஷிவிங் பிளேடு வைத்து சாப்பிட்டுள்ளார். அதனை தன்னுடன் பணிபுரியும் ஊழியர்களிடம் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் அவரை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |