Categories
தேசிய செய்திகள்

“ஷ்ரத்தா கொலை வழக்கு”… அப்தாபுக்கு போதைப்பொருள் சப்ளை செய்த நபர் அதிரடி கைது…..!!!!

டெல்லியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஷ்ரத்தா என்ற இளம் பெண்ணை அவரது காதலரான அப்தாப், 35 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து அப்தாப் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் விசாரணையில் இருக்கிறார்.

இந்நிலையில் அப்தாபுக்கு போதைப் பொருள் சப்ளை செய்து வந்ததாக, பஞ்சாப் மாநிலம் சூரத்தை சேர்ந்த பைசல் மோமின் என்பவரை குற்றப்பிரிவினர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மும்பையில் கைது செய்துள்ளனர். அத்துடன் பைசல் கைதாகும்போது ரூபாய்.4 கோடி மதிப்பிலான போதைப் பொருளை வைத்து இருந்ததாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது கைது செய்யப்பட்ட பைசல் மோமின், சூரத்தின் லாஜ்பூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |