டெல்லியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஷ்ரத்தா என்ற இளம் பெண்ணை அவரது காதலரான அப்தாப், 35 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து அப்தாப் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் விசாரணையில் இருக்கிறார்.
இந்நிலையில் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்த ஷ்ரத்தாவை கொலைசெய்த 1 மணி நேரத்துக்குள், அப்தாப் செயலி வாயிலாக உணவு ஆர்டர் செய்துள்ள தகவலை சிறப்பு விசாரணைக் குழுவானது கண்டறிந்து இருக்கிறது. கடந்த மே 18ம் தேதி கொலை செய்ததாக அப்தாப் கூறினாலும், இதுவரையிலும் அதனை உறுதிசெய்ய போதிய ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.