Categories
தேசிய செய்திகள்

“ஷ்ரத்தா நிலைமை தான் உனக்கும்”…. மிரட்டல் விடுத்த நபர்….. போலீஸ் விசாரணை….!!!!!

மும்பையை சேர்ந்த ஷ்ரத்தா என்ற பெண் சென்ற மே மாதம் டெல்லியில் காதலனால் கொலை செய்யப்பட்டு 35 துண்டுகளாக வெட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து மற்றொரு பெண் அண்மையில் தன் மகனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்து 22 துண்டுகளாக வெட்டி, டெல்லி முழுக்க வீசினார். இந்நிலையில் இந்த சம்பவங்களை  மேற்கோள் காட்டி, அதுபோன்று செய்துவிடுவேன் என தன்னுடன் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்த பெண்ணை ஒருவர் மிரட்டி இருக்கிறார்.

மராட்டியம் துலே பகுதியைச் சேர்ந்த அர்ஷத்சலீம் மாலிக் என்பவருடன் சென்ற வருடம் ஜூலை மாதத்தில் இருந்து ஒரு பெண் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்தார். அப்பெண்ணுக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. ஆனால் அப்பெண்ணின் முதல் கணவர் சாலை விபத்தில் இறந்து விட்டார். அப்பெண்ணை முதலில் சந்தித்தபோது அர்ஷத் தனது பெயரை ஹர்ஷல் மாலி என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். இரண்டு பேரும் சேர்ந்து துலேயிலுள்ள வனப் பகுதியை சுற்றிப்பார்க்கச் சென்றனர். அப்போது அர்ஷத், அப்பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுத்துக்கொண்டார் என்று கூறப்படுகிறது.

பின் இருவரும் சேர்ந்து வாழ்வது என முடிவு செய்தனர். இதற்குரிய ஒப்பந்தம் தயாரிப்பதற்காக அமல்னர் என்ற கிராமத்துக்கு அவர்கள் சென்றனர். பின் இருவரும் ஒஸ்மனாபாத்தில் வீடு எடுத்துத் தங்கினர். அதனை தொடர்ந்து அப்பெண்ணை மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தி அர்ஷத் கொடுமை செய்து வந்தார். இதுகுறித்து அப்பெண் அளித்த புகாரில் “ஒஸ்மனாபாத்தில் இருந்து 4 மாதத்திற்கு பின் துலேவுக்கு வந்தோம்.

அங்கு வந்ததில் இருந்து தன்னை இஸ்லாம் மதத்துக்கு மாறும்மாறு கட்டாயப்படுத்தி வந்தார். மேலும் எனக்கு முதல் திருமணத்தில் பிறந்த குழந்தையையும் இஸ்லாம் மதத்துக்கு மாற்ற முயற்சிசெய்தார். இஸ்லாம் மதத்திற்கு மாற மறுத்ததால் டெல்லியில் ஷ்ரத்தாவை 35 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்ததுபோல் உன்னை 70 துண்டுகளாக வெட்டி விடுவேன் என மிரட்டினார்” என்று குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |