ஜார்கண்டில் இளம்பெண் ஒருவரை 12 துண்டுகளாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்டின் சாகேப்கஞ்ச் என்னும் நகரில் 22 வயது மதிக்கத்தக்க பழங்குடியினம் இளம்பெண் ஒருவர் 12 துண்டுகளாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் வெட்டப்பட்ட அந்த இளம் பெண்ணின் உடலை போலீசார் இன்று கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அந்தப் பெண்ணின் கணவரான திலகர் அன்சாரி என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சென்ற போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து அந்த இளம் பெண்ணின் வெட்டப்பட்ட சில உடல் பாகங்கள் கிடைக்கவில்லை.
அவை காணாமல் போனதால் அவற்றை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக போலீஸ் கூறியுள்ளனர். மேலும் கொலை செய்யப்பட்ட இந்தப் பெண் சந்தேகத்திற்குரிய குற்றவாளியான அவரது கணவருக்கு இரண்டாவது மனைவி என போலீசார் கூறியுள்ளனர். இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சமீப நாட்களாகவே டெல்லி ஷ்ரத்தா வாக்கர் கொடூர கொலைக்கு பின் அவரது உடல் 35 துண்டுகளாக வெட்டப்பட்ட சம்பவம் போல் பல்வேறு சம்பவங்கள் நாட்டின் பல பகுதிகளில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.