ஸ்கிராப் விற்பனை வாயிலாக ரூபாய்.2,500 கோடிக்கு மேலாக வருவாய் ஈட்டியிருப்பதாக ரயில்வே அமைச்சகமானது தெரிவித்து இருக்கிறது.
இந்திய ரயில்வேயானது இந்த நிதி ஆண்டின் முதல் 6 மாதங்களில் ஸ்கிராப் விற்பனை வாயிலாக ரூபாய்.2,500 கோடிக்கு அதிகமான வருவாய் ஈட்டியிருக்கிறது. சென்ற நிதி ஆண்டின் இதே காலக்கட்டத்தை விடவும் ரயில்வே 28% அதிகமாக வருவாய் ஈட்டி இருப்பதாக இரயில்வே அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
அதுமட்டுமின்றி 2022-23ம் வருடத்தில் ஸ்கிராப் விற்பனை வாயிலாக ரூ.4,400 கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக அமைச்சகம் தெரிவித்து உள்ளது. ஸ்கிராப் பொருட்களை திரட்டி, மின்-ஏலம் வாயிலாக விற்பனை செய்வதன் மூலம் வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்த ரயில்வே அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக ரயில்வே அமைச்சகமானது தெரிவித்துள்ளது.