Categories
தேசிய செய்திகள்

ஸ்குவிட் கேம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய மும்பை போலீசார்…. பெரும் வரவேற்பை வீடியோ…!!

மும்பை போலீசார் ஸ்வீட் கேம் இணையதள தொடர் மூலம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.

தற்போது இணையதளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள தொடர்களில் ஸ்குவிட் கேம் ஒன்றாகும். கடந்த செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி வெளியான தொடரை இதுவரை 111 மில்லியன் பேர் பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் வரும் விளையாட்டின் பெயர் ரெட் லைட் ,கிரீன் லைட் என்பதாகும். அதன்படி ரெட் லைட் என்று கூறி இந்த விளையாட்டில் வரும் ராட்சச பொம்மைகள் திரும்பும்போது யாராவது அசைந்தால் அந்த பொம்மைகள் போட்டியாளர்களை சுட்டு வீழ்த்தி விடும்.

இதனை மேற்கோள் காட்டிய மும்பை போலீசார், “சாலைகளில் ரெட் லைட் போடப்பட்டிருக்கும் பொழுது அசையாமல் நின்று நீங்களும் உங்கள் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்” என பதிவிறக்கம் செய்துள்ளனர். இது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு மும்பை போலீசாரால் பதிவிடப்பட்டுள்ளது. மேலும் இது பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |