Categories
தேசிய செய்திகள்

ஸ்கூட்டர் கவிழ்ந்து விபத்து!…. சின்னத்திரை நடிகை காயம்…. பின் நடந்த சம்பவம்…..!!!!!

பெங்களூர் பசவனகுடி அருகில் சுனேத்ரா பண்டித் வசித்து வருகிறார். இவர் கன்னட சின்னத் திரையில் பல நாடகங்களில் நடித்து வருகிறார். இவருடைய கணவர் நடிகர் ரமேஷ்பண்டித் ஆவார். இவர்களில் சுனேத்ரா பண்டித், இதற்கு முன்னதாக சில கன்னட திரைப்படங்களிலும் நடித்து இருந்தார். இப்போது அவர் சின்னத்திரையில் நடிப்பதிலேயே அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது புட்டக்கானா மக்களு எனும் நாடகத்தில் நடிகை சுனேத்ரா பண்டித் நடித்து வருகிறார். இந்நிலையில் நள்ளிரவு சூட்டிங்கில் பங்கேற்றுவிட்டு தன் ஸ்கூட்டரில் சுனேத்ரா பண்டித் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

இதையடுத்து என்.ஆர்.காலனி 9வது மெயின் ரோட்டில் சென்றபோது சாலையில் இருந்த பள்ளத்தில் சுனேத்ரா பண்டித்தின் ஸ்கூட்டர் இறங்கியதாக தெரிகிறது. இதன் காரணமாக சாலையில் ஸ்கூட்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் சுனேத்ரா பண்டித் படுகாயமடைந்தார். அதன்பின் உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையில் சுனேத்ரா பண்டித் ஹெல்மெட் அணிந்திருந்ததால், அவருக்கு தலையில் பெரிய அளவில் காயம் ஏதும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த விபத்திற்கு சாலையில் இருந்த பள்ளமே காரணம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெங்களூருவிலுள்ள குண்டும், குழியுமான சாலைகளால் விபத்துகள் நடந்து உயிர்பலி ஆகும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இப்போது சாலை பள்ளத்தால் நடிகை சுனேத்ரா பண்டித் படுகாயமடைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |