கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகில் வெள்ளச்சிவிளை பகுதியில் வசித்து வருபவர் செல்லத்துரை. இவரது மனைவி ஷைலஜா (42) நேற்று முன்தினம் தன் ஸ்கூட்டரில் வில்லுக்குறி சென்றுவிட்டு வீட்டிற்கு மீண்டும் புறப்பட்டார். இதையடுத்து ஷைலஜா வெள்ளச்சிவிளையை சென்றடைந்தபோது எதிரே மோட்டார்சைக்கிள் ஒன்று வந்தது. அந்த மோட்டார்சைக்கிளை தக்கலை பகுதியில் வசித்துவரும் செல்சோ என்பவர் ஓட்டிவந்துள்ளார். இந்நிலையில் ஸ்கூட்டர் மீது மோட்டார்சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதிவிட்டது.
இதனால் விபத்தில் ஸ்கூட்டரிலிருந்து ஷைலஜா தூக்கிவீசப்பட்டார். இதில் ஷைலஜாவுடைய தலையில் பலத்தகாயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதன்பின் ஷைலஜா மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக புகாரின்படி காவல்துறையினர் மோட்டார்சைக்கிளை ஓட்டிவந்த செல்சோ மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.