ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற பெல் ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்கோவில் பேங்க் காலனி பகுதியில் ஜெகதீசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு பெல் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் ஜெகதீசன் தனது ஸ்கூட்டரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இவர் காவேரி பாலம் ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வேகமாக வந்த லாரி ஜெகதீசனின் ஸ்கூட்டர் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜெகதீசனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஜெகதீசன் பரிதாபமாக இறந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.