Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஸ்கூட்டர் மீது மோதிய லாரி…. பல்கலைக்கழக மாணவி பலி…. விழுப்புரத்தில் கோர விபத்து…!!

ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்திலுள்ள கோழிக்கோடு பகுதியில் முசா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாத்திமா என்ற பெண்ணுடன் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் பாத்திமா புதுச்சேரியில் இருக்கும் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பாத்திமா தன்னுடன் படிக்கும் இர்பான் என்பவருடன் பெருமுக்கல் மலை கோவில் மேலிருந்து சூரியன் உதிப்பதை பார்ப்பதற்காக ஸ்கூட்டரில் சென்றுள்ளார்.

இவர்கள் புதுச்சேரி-திண்டிவனம் புறவழிச்சாலை எண்டியூர் சந்திப்பில் திரும்ப முயற்சிக்கும் போது அவ்வழியாக வேகமாக வந்த மினி லாரி ஸ்கூட்டர் மீது பலமாக மோதிவிட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பாத்திமா மற்றும் இர்பான் ஆகிய இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பாத்திமா பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |