ஸ்கூட்டர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஆம்பூரில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது ஸ்கூட்டரில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அவதானப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று கார்த்திக்கின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.