பண்டிகை காலத்தை முன்னிட்டு யமஹா மோட்டார் இந்தியா நிறுவனத்தின் ஸ்கூட்டர் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை அக்டோபர் 31ஆம் தேதி வரை மட்டுமே வழங்கப்படும். அதன்படி யாமஹா பாசினோ 125 எப் ஐ, ரே இசட் ஆர் ஸ்டிரீட் ரே 125 f5 ஆகிய மாடல்களுக்கு 3000 முதல் 4000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. மேலும் தற்போது ஆர்15 வி4 ஏபிஎஸ், எம்டி 15 ஏபிஎஸ் ப்ளூ கேர் தொழில்நுட்பம்,எப்.இசட். 25 249சிசி (ஏ.பி.எஸ்.), எப்.இசட். எஸ் எப்.ஐ. 149சிசி ஏ.பி.எஸ்., எப்.இசட். எப்.ஐ. 149சிசி ஏ.பி.எஸ்., எப்.இசட். எக்ஸ் 149சிசி ஏ.பி.எஸ்., ஏரோக்ஸ் போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது.
Categories