இந்தியா முழுதும் பரவிய கொரோனா தொற்றின் காரணமாக சென்ற 2020 மற்றும் 2021 ஆம் வருடங்களில் பள்ளிகள் நேரடியாக இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. அத்துடன் மாணவர்களுக்கும் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. இதனால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் மூடப்பட்டது. இத்தகைய சமயத்தில் கல்வி பாதிப்படையக் கூடாது என ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்துவந்தது. இதையடுத்து பல்வேறு கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக படிப் படியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தது.
இதன் காரணமாக ஊரடங்கில் தேவையான தளர்வுகள் அறிவிக்கப்பட்டு 2022-2023 ஆம் கல்வி ஆண்டில் அரசு அனுமதியுடன் பள்ளிகள் திறக்கப்பட்டது. அத்துடன் கொரோனா காலக்கட்டத்திற்கு முன் இருந்தது போல நேரடி வகுப்புகள் இப்போது வழக்கம்போல இயங்கி வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் மந்திரி நாகேஷ் அண்மையில் மண்டியா மாவட்டத்திலுள்ள ஒரு அரசு பள்ளிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது காலை வேளையில் ஆசிரியர்கள் பள்ளிக்கூடத்திற்கு தாமதனமாக வருகை புரிந்ததை அவர் பார்த்துள்ளார்.
அவ்வாறு அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் அரை மணி நேரம் தாமதமாக வந்ததை அடுத்து அம்மாநில பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி ஆசிரியர்கள் பள்ளி தொடங்குவதற்கு 15 நிமிடத்திற்கு முன் பள்ளிக்கு வருகைபுரிய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் ஆசிரியர்களின் வருகைபதிவு முறைக்கு பயோமெட்ரிக் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.