மதுரை ஐகோர்ட்டில் பணிபுரியும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலிருக்கும் நீதிமன்றத்தில் பாக்கியலட்சுமி என்பவர் இளநிலை கட்டளையை நிறைவேற்றுனராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் அரசு பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியருக்கு நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உத்தரவை கொடுக்க சென்றுள்ளார். ஆனால் தலைமையாசிரியர் பாக்யலக்ஷ்மியிடமிருந்து அந்த உத்தரவை வாங்க மறுத்ததுடன் மட்டுமல்லாமல் தள்ளுமுல்லு செயலிலும் ஈடுபட்டார்.
இச்செயலை கண்டித்து மாநில சங்கத்தின் தலைவரான கண்ணன் தலைமையில் மதுரை ஐகோர்ட் இளநிலை கட்டளையை நிறைவேற்றும் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் இச்சங்கத்தை சேர்ந்த மாநில தலைவர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.