மாணவி தற்கொலை செய்வதற்கு முன்பாக எழுதிய கடிதம் கிடைத்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீமதி 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த மாணவி கடந்த 13-ம் தேதி அதிகாலை விடுதி மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் ஸ்ரீமதியின் பெற்றோர் என்னுடைய மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை எனவும், மர்மமான முறையில் உயிரிழந்திருக்கிறார் எனவும் கூறினர். இதனையடுத்து மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறி பள்ளி சூறையாடப்பட்ட நிலையில், தற்போது மாணவி எழுதிய தற்கொலை கடிதம் கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதில் நான் நன்றாக படிப்பேன். ஆனால் வேதியல் டீச்சர் நான் படிக்க சரியாக படிக்கவில்லை எனக் கூறி ரொம்ப பிரஷர் கொடுத்தாங்க. இதை கணக்கு டீச்சர்ட்டையும், வேதியியல் டீச்சர் சொன்னதால் அவங்களும் எனக்கு ரொம்ப பிரஷர் கொடுத்தாங்க. அதோடு 2 பேர்ல ஒருத்தங்க அனைத்து ஆசிரியர்களிடமும் நான் ஒழுங்காக படிக்கவில்லை என கூறியுள்ளனர். இதனால் வகுப்புக்கு வரும் அனைத்து ஆசிரியர்களும் என்னை ஒழுங்காக நீ படிக்க மாட்டியா விளையாட்டுத்தனமாக இருக்கிறாயா என கேட்டாங்க.
என்னை வேதியியல் டீச்சரும், கணக்கு டீச்சரும் பண்ண ரொம்ப டார்ச்சர் பண்ணாங்க. என்னால தாங்க முடியல. அதுமட்டுமின்றி என்னுடைய வகுப்புக்கு வரும் நிறைய டீச்சர்ஸ் எனக்கு ரொம்ப பிரஷர் கொடுத்தாங்க. நான் கணக்கு டீச்சர் ஒரு உதவி மட்டும் கேட்டுக்குறேன். எங்க அம்மா அப்பா இந்த வருஷம் எனக்கு கட்டுன ஸ்கூல் பீஸ் விடுதி பீஸ் புக் பீஸ் அனைத்தையும் திரும்ப அவங்க கிட்டயே கொடுத்துடுங்க. ஏனெனில் நான் ரொம்ப நாள் இருக்க மாட்டேன். என்னோட அம்மா அப்பாவுக்கு சாரி. என்னோட தம்பிக்கும் சாரி. இவ்வாறாக மாணவி கடிதத்தில் எழுதியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.