கரூர் மாவட்டத்தில் குளித்தலை தொகுதி உள்ளது. முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க-வின் முன்னாள் தலைவருமான கலைஞர், முதன்முறையாக தேர்தலில் நின்று எம்.எல்.ஏவாக வாகைசூடிய தொகுதி குளித்தலையாகும். இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக தி.மு.க-வைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் இருக்கிறார். இவரை தான் பா.ஜ.க-வுக்கு இழுக்க அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் பேசியதாகவும், அவர் பா.ஜ.கவுக்கு செல்ல முடிவெடுத்துவிட்டதாகவும் இரண்டு நாட்களாக ஒரு பரபரப்பு செய்தி சமூகவலைதளங்களில் பரவி வந்தது.
இந்நிலையில் அதிமுக-வின் தலைமை நாற்காலியின் நான்கு கால்களுக்கு 4 அணிகள் மோதுவதால் பாஜகவுக்கு வரவு என நினைத்தால், சத்தமே இல்லாமல் திமுக எம்எல்ஏவுக்கே பாஜக ஸ்கெட்ச் போட்டுள்ளது. குளித்தலையின் திமுக எம்எல்ஏ மாணிக்கம், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதிக்கத்தால் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், பாஜகவுக்கு அவரைக் கொத்திக்கொண்டுவரும் முயற்சியில் அண்ணாமலை பாதிகிணறு தாண்டிவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.