தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் பிரதான அங்கம் வகித்து தேர்தலுக்கான ஆயத்த பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே கடந்த சில நாட்களாக விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் திமுக தலைமையுடன் சென்னை மாநகராட்சி தேர்தலுக்கான வார்டு பகுதி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளில் வெறும் 6 வார்டுகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
எனவே திருமாவளவன் திமுகவின் இந்த அணுகுமுறையை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். ஏனென்றால் திமுகவுடன் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு சென்றால் ஒவ்வொரு முறையும் சட்டசபை தேர்தலில் மனம் நிறைவாக சீட்டுகள் தரப்படும் என்று உறுதி அளிக்கப்படுகிறது. அதை நம்பி சட்டசபை தேர்தலின் போது கூட்டணி பேச்சுவார்த்தைக்கு சென்றால் பின்னர் உள்ளாட்சித் தேர்தலின் போது சீட்டுகள் மனம் நிறைவாக தரப்படும் என்று திமுக தரப்பில் உறுதி அளிக்கப்படுகிறது.
அதன் பிறகு உள்ளாட்சி தேர்தல் வார்டு பங்கீட்டிற்காக சென்றால் கட்சி தலைமை நாடாளுமன்றத் தேர்தலில் சிறப்பாக கவனிக்க முடிவு செய்துள்ளது என்று பொய் கூறி கூட்டணி கட்சிகளை திமுக ஏமாற்றி வருவதாக கூறப்படுகிறது. மேலும் திமுக இந்த ராஜதந்திரத்தை பயன்படுத்தி திருமாவளவனையும் ஏமாற்றியுள்ளது. இதனால் டென்ஷனான திருமாவளவன் பக்கா பிளான் ஒன்றை போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது திமுகவுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக திருமாவளவன் உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு திமுகவுடனான கூட்டணி முறித்துக்கொள்ள முடிவெடுத்துள்ளாராம். தற்போது அதற்கான காய்களை தான் நகர்த்தி வருகிறார் என்று கூறப்படுகிறது. திருமாவளவன் கட்சியின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு இந்த திடீர் முடிவு எடுத்துள்ளார். இந்த முடிவுக்கு விசிக மாவட்ட செயலாளர்கள் நல்ல வரவேற்பு அளித்துள்ளனர். மேலும் திருமாவளவனின் இந்த முடிவு தொண்டர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது என்றும் கூறப்படுகிறது.