Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்கெச் போட்டு தூக்கிய திமுக… ரெய்டில் சிக்கிய 3 மாஜி…. என்ன செய்ய போகுது அதிமுக ?

அதிமுக அரசின் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த எம்.ஆர் விஜயபாஸ்கர், உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி வேலுமணி ஆகியோர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் அடிப்படையில் எஸ்.பி வேலுமணி,  எம்.ஆர் விஜயபாஸ்கர் மீது  வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எம் ஆர் விஜயபாஸ்கர் மீதும், அரசு திட்டத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக எஸ்.பி வேலுமணி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது, விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இதற்கிடையில் மூன்றாவதாக அதிமுக அரசு இருந்த சமயத்தில் அமைச்சரான கே.சி வீரமணி வீட்டில் இன்று சோதனை மேற்கொள்ளப்படுகிறது. 28 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகின்றது. சென்னையில் 4 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அனைத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டு  விசாரணை நடைபெறுவதாக  சொல்லப்பட்டுள்ளது.

ஏலகிரி, திருப்பத்தூரில் உள்ள ஹோட்டல், குடியாத்தம் அருகே உள்ள கல்லூரி, முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி சொந்தமான மண்டபம் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் அருகே உள்ள 7 ஹில்ஸ் ஓட்டலில் சோதனை நடந்து வருகிறது, சென்னை சாந்தோமில் உள்ள கே சி வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை ஈடுபட்டு வருகிறார்கள்

திருப்பத்தூரில் இருக்கக்கூடிய அவருடைய வீட்டில் தான் கே சி வீரமணி இருப்பதாக தெரியவந்திருக்கிறது. அவர் முன்னிலையில் தான் அங்கேயும் சோதனை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது

 

Categories

Tech |