ஆரம்ப சுகாதார மருத்துவர்கள் பெண் ஒருவர் கர்ப்பமாக இருப்பதாக தவறாக கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சந்திரப்பட்டியில் வசிக்கும் தம்பதிகள் வேடியப்பன் – அஷ்வினி. இந்நிலையில் அஸ்வினி கடந்த மாதம் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சாதாரண சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். இதனால் கணவன், மனைவி இருவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து அஷ்வினிக்கு கடந்த 7 மாதங்களாக கர்ப்பக்கால சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் திடீரென்று ஒருநாள் அஸ்வினிகடுமையான வயிற்று வலியால் துடித்துள்ளார். இதனால் மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் செய்து பார்த்தபோது கர்ப்பமாக இல்லை என்பதும், வயிற்றில் நீர்க்கட்டி இருப்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து தவறாக தகவல் கூறிய ஆரம்ப சுகாதார மருத்துவர்களிடம் சென்று கேட்டபோது தெரியாமல் தவறு நடந்து விட்டது என்று கூறியுள்ளனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்அஷ்வினியின் உறவினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.