நிகரகுவா என்ற நாட்டில் பிளேயா மஜகுவால் பகுதியில் உள்ள கடற்கரை பகுதியில் ஜோசி புக்கெர்ட் (வயது 37) என்ற பெண் தனது குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார். இந்நிலையில் அந்த பெண் கர்ப்பிணியான காலம் முதல் மருத்துவரை அணுகவோ அல்லது ஸ்கேன் செய்யவோ என்று எதுவும் மேற்கொள்ளவில்லை. மேலும் மருத்துவர்களின் உதவி எதுவும் இன்றியே குழந்தையை பெற்றுள்ளார்.
இந்த பெண்ணுக்கு கடந்த பிப்ரவரி 27-ந் தேதி அன்று ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அக்குழந்தைக்கு போதி அமோர் ஓசன் கார்னீலியஸ் எனவும் பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இதுபற்றி ஜோசி கூறியுள்ளதாவது, சமுத்திரத்தில் குழந்தையை பெற்று கொள்ள விரும்பினேன். இந்த யோசனை எனது சிந்தனையில் இருந்தது. மேலும் அன்றைய தினம், அதற்கேற்ற சூழ்நிலைகளும் சரியாக அமைந்தன. ஆகவே சமுத்திரத்தில் குழந்தை பெற்று கொண்டேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் ஜோசிக்கு பிரசவ வலி வரப்போகிறது என தெரிந்த, அவரது கணவர், ஜோசியை வாகனத்தில் ஏற்றி கொண்டு பீச்சுக்கு சென்றுள்ளார். இதையடுத்து உடன் துண்டுகள், நஞ்சுக்கொடியை எடுக்க பயன்படுத்த சல்லடை, ஒரு கிண்ணம், துணி வலை மற்றும் காகித துண்டுகள் ஆகியவற்றையும் குழந்தை பிறப்புக்கான உபகரணம் ஒன்றும் எடுத்து சென்றுள்ளார்.
இந்நிலையில் ஏற்கனவே 3 குழந்தைகளை பெற்றெடுத்த ஜோசி, அலைகளின் ஓசை உண்மையில் என்னை நன்றாக உணர செய்தது எனவும் கூறியுள்ளார். அந்த வகையில், இந்த முறையில் குழந்தை பெற்றெடுத்ததை பற்றி பலர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். இருந்த போதிலும், ஒரு சிலர் விமர்சனங்களையும் செய்துள்ளனர். அவ்வாறு இது தூய்மையானதா? எனவும் கடலில் பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளன என்றும் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இதேபோல் மற்றொருவர் கூறியுள்ளதாவது, வெப்பம் நிறைந்த கருவறையில் இருந்து குளிரான சமுத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு அதிர்ச்சி ஏதும் ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். இதற்கு ஜோஷி கூறியதாவது, இப்போது பிறந்த போதி, நண்பகலில் சூரிய வெப்பம் 35 டிகிரி இருக்கும் போது பிறந்துள்ளான்.
எனவே அவனுக்கு குளிர் ஏற்படும் என நாங்கள் கவலை கொள்ளவில்லை. மேலும் அவன் ஆரோக்கியத்துடனே இருக்கிறான். மேலும் கூறிய அவர், இதற்கான அனைத்து ஆராய்ச்சிகளையும் மேற்கொண்ட பின், இது பாதுகாப்பானது என உறுதி செய்த பின்னரே, குழந்தையை பெற்றெடுத்தேன் என்று அவர் கூறுகிறார்.