Categories
சினிமா தமிழ் சினிமா

“ஸ்டாப்… நான் சொல்றேன்”…. அதிரடி கொடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…. வெளியான மாஸ் புகைப்படம்….!!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முசாபிர் பாடல் படப்பிடிப்பில் வைத்து மற்றவர்களுக்கு மைக்கில் இன்ஸ்ட்ரெக்சன் கொடுப்பது போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், தனுஷும் பிரிய போவதாக தங்களது இணையதள பக்கத்தில் அறிவித்துள்ளார்கள். இதனைக் கண்ட குடும்பத்தார்களும், உறவினர்களும் அவர்களை மீண்டும் சேர்த்து வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள். ஆனால் விவாகரத்து அறிவிப்பிற்கு பிறகு இருவருமே தங்களது வழக்கமான பணியை செய்ய தொடங்கியுள்ளார்கள். அதன்படி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மியூசிக் ஆல்பம் இயக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார். இதற்காக அவர் ஐதராபாத்தில் தங்கி முசாபிர் என்ற பாடலை பல மொழிகளில் தயாரித்துள்ளார்.

இதனை தமிழில் அனிருத் பாடியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் முசாபிர் பாடலின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் தற்போது மீண்டும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிரடியான புகைப்படம் ஒன்றை ஐஸ்வர்யா பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் ஐஸ்வர்யா மற்றவர்களுக்கு மைக்கில் இன்ஸ்ட்ரெக்சன் கொடுப்பது போன்று இடம் பிடித்துள்ளது. இதற்கு கேப்ஷனாக ஐஸ்வர்யா நிறுத்து நான் சொல்றேன் என்று கொடுத்துள்ளார்.

Categories

Tech |