Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஸ்டாலினின் பிறந்த நாள் கொண்டாட்டம்…. “பட்டாசு வெடித்ததில் பற்றி எரிந்த எம்ஜிஆர் சிலை”… திருப்பத்தூரில் பதற்றம்..!!

மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடிய போது அருகிலிருந்த எம்ஜிஆர் சிலை தீ பற்றி எரிந்தது.

திருப்பத்தூர், கெஜல்நாயக்கம் பட்டியில்  திமுக தொண்டர்கள் மு க ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி பட்டாசு வெடித்து கொண்டாடினர். அப்போது அருகில் இருந்த எம்ஜிஆர் சிலையின் மீது எதிர்பாராமல் பட்டாசு தீ விழுந்தது. இதனால் சிலை முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதனை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர்.

இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இதை அடுத்து இதனை கண்டிக்கும் வகையில் திமுகவினர் கைது செய்ய வேண்டும் என்று அதிமுகவினர் திருப்பத்தூர் – பர்கூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

Categories

Tech |