மு. க. ஸ்டாலினுக்காக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் அறை மற்றும் வளாகம் வர்ணம் பூசி புனரமைக்கப்பட்டு வருகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் 159 இடங்களில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதில் 125 இடங்களில் தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதுதவிர, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணி கட்சிகளின் கணக்கையும் சேர்த்தால் தி.மு.கவின் பலம் 133 ஆக உள்ளது. இதையடுத்து நாளை 34 பேர் கொண்ட புதிய அமைச்சரவையுடம் மு.க.ஸ்டாலின் நாளை ஆளுநர் மாளிகையில் மிக எளிமையாக பதவியேற்கிறார்.
இதைதொடர்ந்து மு.க ஸ்டாலினுக்காக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் அறை மற்றும் வளாகம் வர்ணம் பூசி புனரமைக்கப்பட்டு வருகிறது. நாளை காலை ஆளுநர் மாளிகையில் முதலமைச்சராக பதவியேற்கிறார் மு.க.ஸ்டாலின். பின்னர் தலைமைச்செயலகம் வந்து பொறுப்பேற்று பணிகளைத் துவங்க இருக்கிறார்.